ஞாயிறு, 3 ஜனவரி, 2010

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பறந்த மர்ம 'ஹெலிகாப்டர்'



தூத்துக்குடி மாநகர்பகுதிகளில் பறந்த மர்ம ஹெலிகாப்டர்ரால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மவிமானம் ஒன்று பறந்தது. இந்த விமானம் எங்கிருந்து வந்தது என்ற விபரங்கள் தெரியாத நிலையில், மர்மவிமானத்தால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவியது. நாளடைவில் இதுதொடர்பாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு "ஹெலிகாப்டர்' தாழ்வாக பறந்து சென்றது.

வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணத்தில் இருந்த இந்த "ஹெலிகாப்டர்' தூத்துக்குடி மாநகரை மூன்றுமுறை சுற்றிசுற்றி வந்தது. மேற்கு திசை மற்றும் கிழக்கு திசைப்பகுதிகளில் சுற்றி வந்த இந்த "ஹெலிகாப்டர்' மிகவும் தாழ்வாகவும் பறந்து சென்றது. திடீரென்று தூத்துக்குடியில் மிகவும் தாழ்வாக பறந்தபடி சுற்றி வந்த இந்த ஹெலிகாப்டரால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த "ஹெலிகாப்டர்' எங்கிருந்து வந்தது, எதற்காக வந்தது என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

சுமார் ஒருமணிநேரமாக தாழ்வாக பறந்து சென்ற இந்த ஹெலிகாப்டரால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பும் நிலவியது. தாழ்வாக பறந்துசென்ற ஹெலிகாப்டர் எங்கிருந்து வந்தது என்ன விபரம் என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அதுபற்றி தங்களுக்கு தகவல் எதுவும் தெரியாது என்று பதில் கூறிவிட்டனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் பறந்த விமானமானது மாயமாக சென்ற நிலையில், நேற்று தாழ்வாக பறந்து சென்ற மர்ம "ஹெலிகாப்டர்' தற்போது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 கருத்து:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு