தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. 4 ஆயிரத்து 100 பேர் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கணக்கெடுக்க வரும் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பணியின் துவக்கமாக முதலில் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வீட்டில் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. பணியாளர்கள் கலெக்டரிடம் வீட்டில் உள்ள விபரங்களை கேட்டறிந்தனர்.
கலெக்டர் கூறியதாவது;
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இந்த கணக்கெடுப்பு இருந்தால் அரசின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் ஜூலை மாதம் 15ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விபரத்தை கேட்டு விண்ணப்பத்தில் நிரப்புவர். இம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 கணக்கெடுப்பாளர்கள், 600 மேற்பார்வையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். கணக்கெடுக்க வருபவர்களுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.தூத்துக்குடி ஆர்.டி.ஓ குருதேவி, மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், ஏ.பி.ஆர்.ஓ பாலசக்திதாசன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட போலீஸ் எஸ்.பி செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், நகரின் முக்கிய வி.ஐ.பிக்கள் வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக