வியாழன், 10 டிசம்பர், 2009

துர்நாற்றத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆங்காங்கே கழிவுநீர் பல தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் மக்கள் தினமும் துர்நாற்றத்தில் துன்பப்பட வேண்டிய நிலை இருக்கிறது.நான்கு லாரிகள் மட்டுமே இருப்பதால் கழிவு நீர்களை அகற்ற முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் அரைகுறை யாக விட்டுச்செல்கின்ற னர். உடனடியாக கூடுதலாக லாரிகள் வாங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடி மாநகர பகுதியை பொறுத்தமட்டில் கடல்மட்டத்தை விட பள்ளமாக இருப்பதால் பெரிய அளவில் சுகாதார பிரச்னை ஏற்படுகிறது. முறையாக தண்ணீர் செல்ல முடியாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் சுகாதார பிரச்னை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி கூடுதலாக நான்கைந்து கழிவு நீர் லாரிகளை மாநகராட்சிக்கு உடனே வாங்க வேண்டும். ஆனால் அதனை வாங்குவதில் மாநகராட்சி எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பதால் தான் மழை காலத்தில் கடும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சியாக தூத்துக்குடி மாறிய பிறகும் பாதாள சாக்கடை எடுக்க கூடிய ஒரு லாரியும், மூன்று கழிவு நீர் எடுக்க கூடிய லாரிகள் மட்டுமே உள்ளது. நகராட்சியாக இருந்த போது உள்ள இந்த எண்ணிக்கை மாறவில்லை. இந்த நான்கு லாரிகளை வைத்து கொண்டு 51 வார்டு பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றுவது என்பது சிரமம்.

இதனால் கழிவு நீர் லாரிகள் ஒரு இடத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு இடத்திற்கு அவசரமாக வரவேண்டும் என்று அழைப்பு விடப்படும்.இதனால்அந்த பணியை பாதியில் போட்டு விட்டு அங்கு செல்வர். இதனால் நகரில் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது.இதற்கிடையில் இருக்கிற நான்கு கழிவு நீர் லாரிகளும் வாங்கி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த லாரிகள் பழுது ஏற்பட்டு விடுகிறது. இதற்கிடையில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, கோர்ட் ஆகியவற்றில் உள்ள கழிவு நீர் உள்ளிட்டவற்றை அகற்றவும் மாநகராட்சியை தான் அணுகுகின்றனர். இப்படியாக பல்வேறு பிரச்னைகள் கழிவுநீர் லாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இன்னும் நான்கைந்து கழிவு நீர் லாரிகள் வாங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை செய்தால் தான் இதுபோன்ற பிரச்னையை முடிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக